Irumal Sali Tholaia : It is also a type of water corve | Apply curry leaves | Health Tips | Health Tips | Top 10 Best Health Benefits | Daily Health Tips

Irumal Sali Tholaia :

☆ கபம்:

கபம் என்றால் நீர். (எ. கா.) நெஞ்சில் கபம் /சளி கட்டியிருக்கு. மனித உடலில் உள்ள ஈரபதத்தின் அளவே கபம் என்று குறிப்பிடப்படுகிறது.

இது ஒரு வகையான நீர் கோர்வை என்றும் கூறலாம். குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொள்ளும் போது உடலில் கபம் அளவு அதிகரிக்கிறது.

☆ சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு… என கபத்தால் வரும் நோய்கள் பல.

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை விரட்ட ஒரு டம்ளர் நீர் போதுமா?உண்மை காரணம்..!

☆ தவிர்க்க வேண்டியவை:

பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம்.

☆ கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியவை:

மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும்

☆ கபம் குணமாக:

# கபம் குணமாக கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேலை 3 நாட்கள் சாப்பிட்டு வரவும்.

# கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் கபம் நீங்கும்.

# கபம் நீங்க சுண்டக்காய் சமைத்து சாப்பிட வேண்டும்.

# கபம் தொந்தரவிற்கு தூதுவளை தூளை புகை பிடிக்க குறையும்.

# பாலில் துத்திப் பூவை பொடி செய்து சர்க்கரை கலந்து அருந்தி வர கபம் தீரும்.

# கற்பூரவள்ளி இலையை சூடாக்கி, நெற்றியில் பற்று போட்டால், நெற்றியில் கோத்திருக்கும் நீர் வெளியேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here