“இரவின் நிழல்” திரைப்படம் OTT தளத்தில் வெளியானது. இது குறித்த நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இப்படம் உருவாகியிருந்தது.

OTT தளத்தில் வெளியான இரவின் நிழல்!!… நடிகர் பார்த்திபனின் பதிவு வைரல்!.

இதனால் அதிக ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற தகவலை நடிகர் பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

OTT தளத்தில் வெளியான இரவின் நிழல்!!… நடிகர் பார்த்திபனின் பதிவு வைரல்!.

ஆனால் சில காரணங்களால் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்த படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “மகிழ்ச்சியை கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல் Please நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள் (single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்!
நன்றியுடன். என்று பதிவிட்டிருக்கிறார்.