இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை பார்க்க கண் கூசுது என பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ்.

Irandam Kuthu Director Reply to Bharathi Raja : தமிழ் சினிமாவின் ஹர ஹர மஹாதேவகி இருட்டு-அறையில்-முரட்டு-குத்து ஆகிய அடல்ட் காமெடி படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. டீசர் முழுவதும் இரட்டைக் வசனங்களுடன் மிகவும் ஆபாசமாக இருந்தது.

இதுகுறித்து பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இரண்டாம் குத்து படத்தின் டீசரை பார்க்கவே கண் கூசுது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இரண்டாம் குத்து படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான சந்தோஷ் பி ஜெயக்குமார் நீங்கள் இயக்கிய tik.tik.tik படத்தை பார்க்கும் போது கண் கூசவில்லையா என கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் அவர்கள் பாரதிராஜா அறிக்கைக்கு இப்படி ஒரு பதிலடி கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

https://twitter.com/santhoshpj21/status/1314068431537233920?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.