Irandam Kuthu Teaser

படு மோசமாக பக்கா டபுள் மீனிங்கோடு இரண்டாம் குத்து படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Irandaam Kuthu Teaser Video : தமிழ் சினிமாவில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து.

இந்த இரண்டு படங்களும் அடல்ட் காமெடி படமாக வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. ஹர ஹர மஹாதேவகி படத்தில் டபுள் மீனிங் ஆக இருந்த டயலாக்குகள் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்தில் நேரடியாகவே இருந்தன.

இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் குத்து என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வாழைப்பழத்தை வைத்து படு ஆபாசமாக வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஹீரோ ஹீரோயின் உட்பட அனைவரும் ஒட்டு துணி இல்லாமல் செய்தித்தாளை கொண்டு உடலை மறைத்துக் கொண்டிருக்கும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் முழுக்க முழுக்க ஆபாச வசனங்களும் ஆபாச காட்சிகளும் நிறைந்த இந்தப் படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது.

இந்த டீசர் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது. பலரும் இது குறித்து தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.