இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Irandaam Kuthu Movie First Look Poster : தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஹர ஹர மஹாதேவகி. அடல்ட் காமெடி படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து சந்தோஷ் பி ஜெயக்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் வெளியானது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஆனால் இதில் கௌதம் கார்த்திக்கு பதிலாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாரே நாயகனாக நடித்துள்ளார்.

படு ஆபாசமாக வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - புகைப்படத்துடன் இதோ.!!

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. படத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்துள்ளனர். பிக்பாஸ் டேனி மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மிகவும் ஆபாசமாக வெளியாகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.