God Pray

🙏 இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். சிலர் நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணங்குகிறார்கள். இவை அனைத்துமே சரியானதுதான்.

🙏 கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குவது:
உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை, நீ ஒருவனே எனக்குத் துணை என்று இறைவனைச் சரண் அடைவதன் வெளிப்பாடு. திரௌபதி கண்ணனைச் சரணடைந்ததும் இப்படித்தான்.

🙏 முகத்திற்கு அருகில் கைகளை குவித்து தலை குனிந்து வணங்குவது:

கடவுள் மீது நமக்கு இருக்கும் அடக்கத்தை தெரியப்படுத்துகிறது.

🙏 நெஞ்சிற்கு நேராக கைகளைக் குவித்து வணங்குவது; இறைவா உன்னை என் நெஞ்சிற்குள்ளேயே வைத்திருக்கிறேன், எப்பொழுதும் என்னைக் காப்பாய். உனக்குக் கீழ்தான் உலகமே இயங்குகிறது என்ற பொருளில் சாதாரணமாக எல்லோரும் வணங்குகின்ற முறை.

🙏 இவ்வாறாக அவரவர் எண்ணத்திற்குத் தக்கவாறு வணங்கும் முறையானது வேறுபடுகிறது. இதில் சரி, தவறு என்று எதுவுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here