ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக படத்தை இயக்க உள்ளார் அமீர்.

Iraivan Miga Periyavan First Look : தமிழ் சினிமாவில் சூர்யாவின் நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தவர் அமீர். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் அதை தொடர்ந்து இவர் இயக்கிய ராம் மற்றும் பருத்தி வீரன் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன.

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனரான அமீர்.. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா? - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இறுதியாக இவர் இயக்கிய ஆதிபகவான் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து அமீர் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பயணத்தை தொடர்ந்தார்.

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இயக்குனராக படத்தை இயக்க உள்ளார். சூரியை வைத்து இவர் படத்தை தயாரிக்க இருந்த நிலையில் தற்போது அந்த படத்தை இவரே இயக்க முடிவு செய்துள்ளார். படத்திற்கு இறைவன் மிகப் பெரியவன் என டைட்டில் வைத்துள்ளனர்.

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனரான அமீர்.. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா? - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அமீர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து இருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.