
IPL Vs World Cup : அடுத்த ஆண்டு மிக குறைந்த கால இடைவெளியில் ஐபிஎல்மற்றும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றதாக கிரிக்கெட் வாரிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
சரியான கால இடைவெளி இல்லாமலும், ஓய்வு இல்லாமலும் உலக கோப்பையை எதிர்கொள்வது கடினம் என்பதால் சில வீரர்கள் போட்டிகள் முழுவதும் விளையாடுவது கடினம் என்ற கருத்தை கூறி உள்ளானர்.
ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரியமியர் லீக் தொடர் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி சிறப்பாக நடந்து வருகின்றது.
தங்கள் நாட்டுக்காக ஒரு ஆண்டு முழுவதும் விளயாடி கிடைக்கும் சம்பளத்தை விட இந்த ஐபிஎல் தொடரில் அதாவது 45 நாட்களில் விளையாடுவதால் கிடைத்து விடுவதாகவும் கருதுகின்றனர் விளையாட்டு வீரர்கள்.
சில வீரர்கள் இவற்றையும் தாண்டி தங்கள் நாட்டுக்காக விளையாடாமல் கூட ஐபிஎல் போட்டிகளில் விளயாடுகின்றனர்.
இப்படி பட்ட நிலையில் ஐபிஎல் மற்றும் உலக கோப்பை போட்டிகள் அடுத்தடுத்து கால இடைவெளி இல்லாமல் வருவது அனைத்து தரப்பு கிரிக்கெட் நிறுவனத்தையும் யோசிக்கவைத்து உள்ளது.
மேலும் இந்தியாவில் ஐபிஎல் மார்ச் 23-ல் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகின்றது.
அதே சமயத்தில் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. எனவே பாதுகாப்பை கருதி ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெற போவதாகவும் அதனை பற்றின விவரங்கள் பிறகு தெரிவிக்கபடும் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்றும் இப்படி பட்ட சூழலில் இந்தியா உலக கோப்பை போட்டியில் எந்த பாதிப்பும் ஏற்படமால் இருபதற்காகவே கோலி, தோனி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியது.
எதுவாகினும் இந்தியா உலக கோப்பையை இழக்காமல் இருந்தால் சரி என்றே பெரு மூச்சு விடுகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.