IPL Today Match
IPL Today Match

IPL Today Match – பெங்களூரு: பிரிமியர் தொடருக்கான லீக் போட்டியில் இன்று பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் காத்திருக்கின்றன.

இந்தியாவில், பிரிமியர் தொடருக்கான 12வது சீசன் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, கோல்கட்டா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, ரோகித் சர்மா வழிநடத்தும் மும்பை அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் பெங்களூரு அணி உள்ளது.

இப்போட்டியில் கேப்டன் கோலி, டிவிலியர்ஸ், மொயீன் அலி, ஷிம்ரான் ஹெட்மயர், ஷிவம் துபே உள்ளிட்ட 9 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர்.

இதனால் பெங்களூரு அணி 70 ரன்னுக்கு சுருண்டது. இவர்கள் இன்று எழுச்சி கண்டால் மட்டுமே நல்ல ஸ்கோரை பெற முடியும். பார்த்திவ் படேல் மீண்டும் நல்ல துவக்கம் தரலாம்.

‘சுழலில்’ யுவேந்திர சகால், மொயீன் அலி நம்பிக்கை தருகின்றனர். கடந்த போட்டியில் வேகத்தில் ஏமாற்றிய உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது.

இன்று பெங்களூரு அணியில் மாற்றம் செய்ய விரும்பினால் வாஷிங்டன் சுந்தர், நாதன் கூல்டர்-நைல், கோலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுத்தீ உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்கலாம்.

அதே போல் டில்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த விரக்தியில் மும்பை அணி உள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்தால் நல்லது.

டில்லி அணிக்கு எதிராக அரைசதம் கடந்த யுவராஜ் சிங் மீண்டும் கைகொடுக்கலாம். ‘ஆல்-ரவுண்டர்’ போலார்டு ‘மிடில்-ஆர்டரில்’ அதிரடி காட்டினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

லசித் மலிங்கா வருகையால் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பலமடையலாம். கடந்த போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது தோள்பட்டை பகுதியில் காயமடைந்த பும்ரா, நேற்று சகவீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நிம்மதி அளித்திருக்கும்.

இவர்களுக்கு மெக்லீனகன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒத்துழைப்பு தந்தால் முதல் வெற்றியை பதிவு செய்யலாம். ‘சுழலில்’ குர்னால் பாண்ட்யா ரன் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக பிரிமியர் தொடர் வரலாற்றில் பெங்களூரு, மும்பை அணிகள் 23 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 14, பெங்களூரு 9 போட்டிகளில் வெற்றி பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here