
IPL Players : இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டு வரும் 18-ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அந்த லீக் போட்டியில் தமிழக வீரர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.
இதுவரை 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களில் எண்ணிக்கை 346 ஆகும். அதில் 9 வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
வீரர்களின் உயர்ந்தபட்ச அடிப்படை தொடகையான ரூ.2 கோடி வரம்புக்குள் ஒரு இந்திய வீரர் கூட வரவில்லை.
மெக்கல்லம். கிறிஸ் வோக்ஸ, லசித் மலிங்கா, ஷான் மார்ஷ், காலின் இங்கிராம், கோரே ஆண்டர்சன் . ஏஞ்சலோ மேத்யூஸ், சாம் கர்ரன் மற்றும் டி ஆர்சி ஹார்ட் ஆகியோர் ரூ.2 கோடியின் வரம்பில் உள்ளனர்.
கடந்த முறை ரூ.11.5 கோடிக்கு பெறப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் மட்டுமே ரூ.1.5 கோடிக்கு அடிப்படைத் தொகை வரம்பில் உள்ள இந்திய வீரர்.
யுவராஜ் சிங், அக்ஸ்ர் ஆகியோர் 1 கோடியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் மற்ற வீரர்களும் 1 லட்சம், 50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ வீரர்களின் பெயர்களும் இந்த போட்டியில் இடம்பெற்று இருக்கும் நிலையில் அவர்களின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
· பாபா இந்திரஜித் – ரூ.20 லட்சம்
· பாபா அபரஜித் – ரூ.20 லட்சம்
· அனிருதா ஸ்ரீகாந்த் – ரூ.30 லட்சம்
· எம். அஸ்வின் முருகன் – ரூ.20 லட்சம்
· சி.வி. வருண் சக்கரவர்த்தி – ரூ.20 லட்சம்
· சாய் கிஷோர் – ரூ.20 லட்சம்
· ஆர். விவேக் – ரூ.20 லட்சம்
· ஆர். சஞ்சய் யாதவ் – ரூ.20 லட்சம்
· கே.விக்னேஷ் – ரூ.30 லட்சம்
கடந்த ஆண்டு போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் நடக்க இருக்கும் அடுத்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்வார்களா இல்லை விடுவிக்க படுவார்களா என்றும், புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்படுமா என்றும் 18-ஆம் தேதி அன்று பார்த்தால் மட்டுமே தெரியும்.