IPL match - Kings XI Punjab
IPL match - Kings XI Punjab

IPL match – Kings XI Punjab – ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய பௌலிங், பீல்டிங் பயிர்ச்கியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2018 ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணி 7-வது இடத்தை பெற்றது.

இந்நிலையில் பௌலிங் பயிற்சியாளராக இருந்த வெங்கடேஷ் பிரசாத் பதவியயை விட்டு விலகினார். அதனால், தலைமை பயிற்சியாளராக மைக் ஹேஸன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பல வீரர்கள் விடிவிக்கப்பட்டு இருப்பதும், புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதுமாக உள்ளது.

ஏற்கனவே டெல்லி அணியின் பெயர் மாற்றம் நடந்த நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் மாற்றப்பட்டு உள்ளார்.

தற்போது புதிய பௌலிங் பயிற்ச்சியாளராக ஆஸ்,. அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரயான் ஹாரிஸ், பீல்டிங் பயிற்ச்சியாளராக நியூசி, அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கிரெய்ஸ் மேக்மில்லன் என இருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மற்றும், பஞ்சாப் அணி தனது நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை விடுவித்து அவரின் தொடக்க ஏல மதிப்பு இப்போது ஒரு கோடியில் இருப்பதும் குறிப்பிட தக்கது.

இது போன்ற மாற்றங்களில் பஞ்சாப் அணி ஏற்படுத்தி இருக்கின்றது போட்டியில் எவ்வளவு பலத்தை தருகின்றது மற்றும் இந்த முறை பஞ்சாப் அணி எந்த இடத்தை பிடிக்கின்றது என்று பொருதிருந்து பார்த்தால் தெரிய வரும்.