குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நகைச்சுவையாக நடைபெற்று வரும் இந்த சமையல் நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் வாரம் தோறும் பல முன்னணி பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருகை தந்திருந்தார்.

அதேபோல் இந்நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கலந்து கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி இந்நிகழ்ச்சியின் வரும் வாரத்தில் IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.