IPC376 Teaser Promo
IPC376 Teaser Promo

அப்பவுமே தளபதி விஜய் கூறிய டயலாக்கை நந்திதா ஸ்வேதா பேசி அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

IPC376 Teaser Promo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இதுவரை பல படங்களில் நடித்துள்ள இவர் புலி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.

தளபதி விஜயின் ரசிகையான நந்திதா ஸ்வேதா தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஐபிசி 376 என்பது பாலியல் வன்கொடுமை சட்டத்தை குறிப்பதாகும்.

இந்தப் படமும் பாலியல் வன்கொடுமை பற்றி தான் பேச உள்ளது. ராம்குமார் சூப்பராமன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் வெகு விரைவில் வெளியாக உள்ளது.

STR எடுத்த அதிரடி முடிவு.. அடுத்தடுத்து உருவாகப் போகும் படங்கள் என்னென்ன? – வெளியான அதிரடி அப்டேட்

இதுகுறித்த புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தளபதி விஜய் நடிப்பில் மஜித் இயக்கத்தில் வெளியான தமிழன் படத்தில் இந்த சட்டம் பற்றி பேசி இருப்பார்.

தற்போது அதேபோல் நந்திதா ஸ்வேதா பேசியுள்ளார். இந்த இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த பிரபல வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ஐபிசி 376 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

https://twitter.com/Nanditasweta/status/1274336441544278022?s=19
https://twitter.com/Maniitwts/status/1274339420871684096?s=19
https://twitter.com/Itz_MohanVJ/status/1274558749760466945?s=19