Nandita Swetha IPC 376

IPC 376 : நந்திதா ஸ்வேதா போலீசாக நடித்து மிரட்ட உள்ள IPC 376 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது நாயகியை மையமாக கொண்டு உருவாகும் IPC 376 என்ற படத்தில் போலீசாக நடிக்கிறார்.

இந்த படத்தை எஸ்.பிரபாகரின் பவர் கிங் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க ராம் குமார் சுப்பாராமன் என்பவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெளியான ஒரு போஸ்டரில் நந்திதா ஸ்வேதா போலீஸ் கெட்டப்பில் இருப்பது போலவும் மற்றொரு போஸ்டரில் சாதாரண உருவம் ஒன்றும் முகம் முழுவதும் கருநிற வேடத்தில் ஆக்ரோஷமாக இருப்பது போலவும் உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் இது நந்திதா ஸ்வேதாவிற்கு ஒரு சிறந்த படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

IPC 376 IPC 376

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.