சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் இன்விடேஷன் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவின் இன்விடேஷன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த விழா வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிட்டியில் மாலை 5:30மணிக்கு நடைபெற உள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் வருகை தர இருப்பதாகவும் தகவல் அந்த இன்விடேஷன் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.