Interview With P.T.Selvakumar

P.T Selvakumar Interview : தளபதி விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இருக்கு ஆனால் ரஜினிக்கு அரசியலில் தெளிவு இல்லை என விஜயின் புலி படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளருமாக இருந்தவர் பி.செல்வகுமார். இவர் தற்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் வாயிலாக தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இவரை எமது இணையதளத்தின் சார்பாக பேட்டி எடுத்த போது அரசியல், சமூக சேவை, சினிமா என பல வகையான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கஜா புயல் உதவிகள் குறித்து கேட்டதற்கு

முதலில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்து டீ.ராஜேந்தர் அவர்களின் முன்னிலையில் ரூ 25 லட்சம் மதிப்பில் உணவு பொருட்களை மட்டுமே அனுப்பி வைத்தோம்.

அதன் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பாதிக்கப்பட்ட 500 ஏழை பெண்களுக்கு பசுக்கன்றுகளை கொடுத்து உதவினோம்.

அதனை தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் 1008 ஆடுகள் கொடுத்து உதவி செய்திருந்தோம். இவைகளை தொடர்ந்து தென்னை மரக்கன்றுகளை வழங்கி விவசாயிகளுக்கு உதவுவதற்காக திட்டம் தீட்டி வருகிறோம் என கூறினார்.

மேலும் இவை அனைத்தும் விளம்பரத்திற்காக அல்ல.. நம்மை பார்த்து பலரும் நம்முடைய தமிழ் மக்களுக்காக உதவ வேண்டும், டெல்டா மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பது மட்டும் தான் எனது குறிக்கோள் எனவும் பதிலளித்தார்.

ரஜினி, கமல், விஜய் அரசியல் பயணம் குறித்து கேட்டதற்கு

கமல்ஹாசன் அடிதட்டு மக்களை பற்றி சிந்து செயல்பட்டு வருகிறார், அவர் ஆட்சிக்கு வந்து இதே சிந்தனையுடன் செயல்பட்டால் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். அடிதட்டு மக்களுக்காக சேவை செய்வார் என நம்புகிறேன் என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த அவர்கள் இந்தியா சினிமாவிற்கு கிடைத்த மிக சிறந்த நடிகர், ஆனால் அவருக்கு அரசியலில் தெளிவு இல்லை. முதலில் பா.ஜ.க வலுவான கட்சி என்ற கூறிய அவர் 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிறகு மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது என கூறுகிறார்.

அரசியலில் ஈடுபட்டால் பயம் இருக்க கூடாது, அப்படி பயமிருந்தால் அரசியலுக்கு வர கூடாது என பேசினார். மேலும் விஜய் பற்றியும் சர்கார் பிரச்சனைகள் குறித்தும் கேட்டதற்கு விஜய்க்கு மக்களின் மீது அக்கறை உள்ளது.

அதனால் சர்கார் போன்ற படங்களில் நடிக்கிறார். அவர் அரசியலுக்கு வருவேன் என அறிவிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் அதற்காக செயல்பாடுகள் நடந்து கொண்டு வருவதாக தான் எனக்கு தெரிகிறது எனவும் கூறினார்.

மக்கள் மீது மதிப்பு இருப்பதால் தான் அனிதாவின் தற்கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு போன்ற பிரச்சனைகளுக்கு எவ்வித விளம்பரமும் இல்லாமல் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வந்தார்.

கஜா புயலுக்கும் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் வாங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உதவு செய்தார் எனவும் கூறினார்.

பா.ஜ.க-வின் தோல்வி மற்றும் திட்டங்கள் குறித்து கேட்டதற்கு

சாதாரண டிவி கடை நடத்தி வந்தவரின் மகன் என்பதால் தான் மோடி அவர்கள் அடித்தட்டு மக்களுக்கு உதவுவார், ஏழை மக்களின் கஷ்டங்கள் அவருக்கு தெரியும் என பிரதம மந்திரியாக தேர்வு செய்தார்கள்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை மக்களை கண்டு கொள்ளவே இல்லை. சாதாரண பொருட்களுக்கு கூட ஜி.எஸ்.டி விதித்து நடுத்த மக்களை படாதபாடு படுத்தி வருகிறார்கள். இதற்கெல்லாம் கிடைத்த பரிசு தான் 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் என கூறினார்.

அதே போல சாலை வரி வசூலிப்பது மட்டுமில்லாமல் சுங்க சாவடிகள் மூலமாக பணம் வசூல் செய்கிறார்கள்.. இந்த பணம் எல்லாம் எங்கே செல்கிறது? இந்த பணத்தின் மூலம் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் மத்திய அரசு வெள்ளை அறிக்கை மூலமாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.