International Top Rated Education Centers List : தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான அடல் தரவரிசை காண போட்டியில் பல கல்வி நிறுவனங்கள் சாதனை படைத்துள்ளன. அதில் தமிழகத்தில் சென்னை ஐஐடி, கோவை சிஐடி, சென்னை எஸ் ஆர் எம், வேலூர் விஐடி, கோவை அவினாசி அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி ஆகியவை முத்திரை பதித்துள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான அடல் தரவரிசை ARIIA என்ற திட்டம், மத்திய கல்வி அமைச்சகத்தால் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தபட்டதாகும்.

இந்த திட்டம் உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களை புதுமை கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தரவரிசைபடுத்துகிறது. இந்த அடல் தரவரிசை ஆனது 6 பிரிவுகளில் செயல்படுகிறது.

13 மாவட்டங்களில் 80% பேர் கொரானாவிலிருந்து பூரண குணம் – தமிழக அரசு தரப்பில் தகவல்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில நிதி உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நிதி அளிக்கும் தன்னாட்சி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மகளிருக்கான பிரத்தியேக உயர்கல்வி நிறுவனங்கள் என ஆறு நிலைகளில் தர வரிசை மதிப்பிடப்படுகிறது.

இதில் முதல் பிரிவுக்கான தரவரிசை போட்டியில் முதல் மூன்று இடங்களை சென்னை, மும்பை, தில்லி ஐஐடிகள் பெற்றுள்ளன. ஐஐஎஸ்சி பெங்களூர், ஐஐடி கண்பூர் நான்காவது ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளனர். இந்தப் பிரிவின் கீழ் முதல் 10 இடங்களில் ஏழு அடிகள் இடம் பெற்றுள்ளன.

மாநில அரசின் நிதி உதவி பெறும் பல்கலைக்கழகங்களில் மகாராஷ்டிராவின் வேதியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலிடமும் பஞ்சாப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் சவுதரி சரன் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

அதேபோல் மாநில நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் புனே பொறியியல் கல்லூரி முதலிடத்திலும், கர்நாடக மாநிலத்தின் பிஇஎஸ் பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், தமிழகத்தின் கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களில், ஒடிசா மாநிலம் கலிங்கா இன்ஸ்டியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி முதலிடத்திலும், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 10 நோயாளிகள் உயிரிழப்பு!!

அதேபோல் மகளிருக்கான உயர் கல்வி நிறுவன வரிசையில் தமிழகத்தில் கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மகளிர் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ்போக்கியால் பேசுகையில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரால் இந்த தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.