சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்து வருவதாக ஆர்யாவின் திரைப்பட இயக்குனர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

International Awards for Mahamuni Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் மகாமுனி. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை சாந்த குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்கும் ஆர்யாவின் திரைப்படம் - இயக்குனர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்து வருகிறது. இதுகுறித்து இயக்குனர் சாந்தகுமார் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. மேலும் இரண்டு விருதுகள் இறுதி ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இரண்டு விருது போட்டியில் மகாமுனி திரைப்படம் தேர்வாகி உள்ளது என கூறியுள்ளார்.