Instagram Hacking Problem : Tamil nadu, india, Latest Tamil news, Facebook, Twitter,  Instagram, Chennai,  Instagram Problem

 Instagram Hacking Problem :

சென்னை: இன்ஸ்டகிராம் செயலியில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப பிழையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழர் ஒருவருக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தை வெகுமதியாக வழங்கி அந்நிறுவனம் அவரை கௌரவப்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியாளரான லக்ஷ்மண் முத்தையா, இன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் தொழில்நுட்ப பிழை உள்ளதாகவும் அதன் மூலம் எந்த ஒரு பயனர்களின் கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் எனவும் கண்டுபிடித்தார்.

சமையல் அறையை வாஸ்துப்படி அமைக்கத் தவறினால் என்ன நடக்கும்? தெரிந்து கொள்ளலாமா!

இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்து சென்ற அவர் இன்ஸ்டகிராமில் மறந்துபோன பாஸ்வேடுகளை (password) திரும்பப்பெறும் அமைப்பில் தொழில்நுட்ப பிழை இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் பயனர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் கன்பர்மேஷன் மெசேஜ் அமைப்பில் தொழில்நுட்ப பிழை இருப்பதாகவும், அதன்முலம் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். இவ்வாறு அவர் சுட்டிக்காட்டிய பிழையானது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறை சுட்டிக்காட்டி, உதவியதற்காக அந்நிறுவனம் லக்ஷ்மண் முத்தையாவிற்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிடும் புகைப்படங்களை அவருக்கு தெரியாமலேயே மற்றவர்கள் நீக்கிக் கொள்ளகூடிய பாதுகாப்பற்ற தன்மை இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.