Insomnia : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Insomnia :

தூக்கமின்மை ஏற்படக்கூடும் :

☆ போதுமான அளவுக்குத் தூங்க இயலாமையே தூக்கமின்மைக் கோளாறு என அழைக்கப்படுகிறது.

☆ நமது மூளையில் பட்டாணி அளவில் இருக்கும் பினியல் சுரப்பியானது மெலட்டோனின் என்னும் சுரப்பியை சுரக்கிறது.

இவையே தூக்கம் வருவதற்கு காரணமாக அமைகிறது. இவை பகல் நேரத்தில் சுரக்காது, இரவில் வெளிச்சம் இல்லாத போது மட்டுமே சுரக்கும்.

சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குறைத்துவிடலாம். தெரிந்து கொள்வோமா?

☆ இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கவனக் குறைவு, ஞாபக மறதி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு அதிகமாகும். அதே போல் கற்பதிலும் ஆர்வம் குறைந்து விடும்.

☆ ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு எலும்புகள் வலுவாக பாதிக்கிறது. எலும்பில் மினரல்ஸ் அளவு குறைவாக இருக்கும். இதனால் எலும்பு வலுவிழந்து காணப்படும்.

☆ தூக்கமின்மை வர காரணங்கள்:

இதய நோய்கள், ஆஸ்துமா, நீடித்த நெஞ்சடைப்பு நோய் போன்ற சுவாச நோய்கள்.

☆ அல்சைமர், பார்க்கின்சன் நோய் போன்ற நரம்பு நோய்கள்.

☆ தைராயிடு மிகைச்செயல்பாடு போன்ற இயக்குநீர் பிரச்சினைகள் கீல்வாதம் போன்ற மூட்டு, தசைப் பிரச்சினைகள்.

☆ மயக்க நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்க நோய்கள்.

☆ அதிகமாக காஃபைன் எடுப்பதும் தூக்க முறையைப் பாதிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here