திரையரங்குகள் திறந்ததும் விஜய் படங்கள்தன் ரிலீஸ் என பிரபல நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
Inox Theatre Announcement About Vijay Movies Release : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவின் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதல் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் நெருங்கி வருகிறது. 5 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்குதல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் மூடி வைக்கப் பட்டுள்ளன.
திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? மாஸ்டர் வலிமை வேண்டியது திரைப் படங்கள் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல நிறுவனங்களில் ஒன்றான Inox சினிமாஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் விஜய்யின் காட்சிக்கான திரைப்படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.