விஜய் மகனின் பெயரை உபயோகப்படுத்தி பொய்யான அக்கவுண்டில் இருந்து வெளியான twitter பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார். இருந்தாலும், வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் மற்றும் வீடியோக்களும் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய் மகனான ஜேசன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாரிசு படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்தது போல் ஒரு ட்விட்டர் பதிவு வைரலானது. ஆனால் அது பொய்யான அக்கவுண்ட் என்றும் விஜயின் மகன் எந்த ஒரு சமூக வலைதள பக்கத்தையும் பயன்படுத்தவில்லை, அதனால் இது போன்ற பதிவுகளை யாரும் பகிர வேண்டாம் என்று மக்கள் தொடர்பாளரான ரியாஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்து இருக்கிறார். இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் அது விஜய் மகன் இல்லையா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.