INDvsAUS 4th Test
INDvsAUS 4th Test

INDvsAUS 4th Test – இந்தியா, ஆஸ், இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடந்து ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கியது. இன்று மூன்றாவது நாள் போட்டி நடந்து முடிந்து உள்ளது.

முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 627 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

சிறப்பாக விளையாடிய புஜாரா 193 எடுத்து இருந்தார். மேலும் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்., அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 72 ரன்கள் இருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்., அணி. அடுத்து 128 ரனுக்கு தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

அடுத்து அடுத்து சொற்ப ரன்களில் ஆஸ்., அணி வீரர்கள் ஆட்டமிழக்க ஆஸ்., அணி சற்று தடுமாற்றத்துடன் நிதானத்தை கடைபிடிக்க தொடங்கியது. அதிகபட்சமாக ஆஸ்., அணியின் தொடக்க வீரர் ஹாரிஸ் 79 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ஜடேஜா 2 விக்கெட் எடுத்தார். மற்றும் யாதவ் 3 விக்கெட் எடுத்தார்.

இதனால் 3-ஆம் நாள் போட்டியான இன்றைய ஆட்ட முடிவில் ஆஸ்., அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து உள்ளது.