Indonesia Masters 2019
Indonesia Masters 2019

Indonesia Masters 2019 – இந்திய மேட்மிண்டன் வீரர் மற்றும் விரங்கைகள் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடிய இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இந்தோனேசியா வீராங்கையை எதிர்கொண்டார்.

இதில் பி.வி.சிந்து 23-21, 21-7 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் மற்றொரு இந்தோனேசியா வீராங்கனையை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்து உள்ளார்.

மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் ஜப்பான் நாட்டை சேர்ந்த வீரரை எதிர்கொண்டு 21-14, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

காலிறுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்று அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளும் கடும் பயிற்சியுடன் களமிறங்க உள்ளனர்.