naanguneri

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட சுயேட்சை வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இதில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தற்போதையை நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 1,13,428 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், திமுக வேட்பாளர் 68,646 வாக்குகள் பெற்று 2ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,913 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 67,719 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், காங்கிரஸ் வேட்பாளர் 47,050 வாக்குகளும், நாம் தமிழர் 1704 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

இதில், நாங்குநேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட சுயேட்சை வேட்பாளரான பனங்காட்டுப்படை மக்கள் கட்சியின் ஹரிநாடார் 519 வாக்குகள் முன்னிலை அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.