'Indirect election' for mayor
'Indirect election' for mayor

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறபித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை தேர்தலின் போது, மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். இந்த நடைமுறையானது 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் இருந்தது. இந்நிலையில் மேயர் பதவிக்கு ‘மறைமுக தேர்தல்’ நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறபித்துள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நேரடியாக ‘மேயர்’ மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசுக்கு சில சிக்கல் வரும் எனவும், அரசியல் காரணங்களாக பாஜக 5 மேயர் இடங்களை கேட்பதன் காரணமாகவும், மேலும் பல்வேறு நெருக்கடிகள் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைபெற இருக்கும் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மக்கள் நேரடியாக மேயரை, நகராட்சி தலைவரை தேந்தெடுக்காமல், மறைமுகமாக தேர்ந்தெடுக்க, மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.