இந்திரஜா ரோபோ சங்கர் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் மாமா கார்த்திக் உடன் இந்திரஜா ரோபோ சங்கருக்கு திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமாக உள்ளார் என்பதை அறிவித்துள்ளார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்த சந்தோசமான தகவலை பகிர்ந்துள்ளனர். பிறகு ரோபோ சங்கரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தோஷப்படுகிறார்.
இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.