Indias Women
Indias Women

Indias Women – ஜனவரி மாதம் நியூஸிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் சென்று மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய அணி.

மேலும் ஒரு நாள் போட்டி தொடருக்கு கேப்டனாக மிதாலி ராஜும், டி-20 போட்டிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கௌரும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற மகளிர் டி-20 உலக கோப்பை போட்டியின் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறியது.

இந்த போட்டியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கபடாமல் போனது பெரிய பிரச்சனையாக மாறியது.

மிதாலி ராஜ் நீக்கபட்டதற்கு முன்னாள் பயிற்சியாளர் மற்றும் சிஏஓ உறுபினர்களில் ஒருவரும் காரணம் என மிதாலி ராஜ் பிசிசிஐ-கு கடிதம் எழுதி இருந்தார்.

இதனை தொடர்ந்து பயிற்சியாளர் பாவரை நீக்க வேண்டும் என்று மிதாலி தரப்பினரும், நீக்க வேண்டாம் என்று கௌர் ஆகியோரும் கடிதம் எழுதி இருந்தனர்.

இதற்கிடையில், பாவரின் பணி காலம் முடிவடையவே புதிய பயிற்சியாளரை நியமிப்பது என்று பிசிசிஐ அறிவித்தது.

இதனை தொடர்ந்து, புதிய பயிச்சியாளராக டிபிள்யு வி. ராமன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த வேத கிறிஷ்ணமூர்த்தி ஒரு நாள் மற்றும் டி-20 என இரு போட்டிகளிலும் இடம் பிடிக்கவில்லை.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி :

1. மிதாலி ராஜ் (c)

2. பூனம் ரவுட், 3. மந்தானா

4.ஜெமிமா, 5. கௌர்

6. தீப்தி சர்மா,

7. தானிய பாட்டியா

8. மோனா மேஸ்ராம்,

9. ஏக்தா பிஷ்த்

10. மான்சி ஜோஷி,

11. தயாளன் ஹேமலதா

12. பூனம் யாதவ்,

13. ராஜேஸ்வரி கெய்க்வட்

14. ஜூலன் கோஸ்வாமி,

15. ஷிகா பாண்டே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here