Indian Women Team Won
Indian Women Team Won

Indian Women Team Won – சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்கு எதிரான 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் அசத்திய இந்திய பெண்கள் அணி 138 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்று உள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக உள்ளூர் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியுடன் 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

நேப்பியரில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஆட்டத்தை தொடங்கிய மித்தாலி மற்றும் சர்மா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விக்கெட் இழக்க ரன்கள் சேர்பதில் கடினம் ஏற்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் நிதானமாக விளையாடி அரை சதம் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு எடுத்து சென்றனர். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 217 ரன்கள் எடுத்தது.

மேலும் சிறப்பாக பந்து வீசி, எதிரணியை 31.4 ஓவருக்கு 79 ரன்களில் சுருட்டியது. இந்திய அணி சார்பில் பூணம் 4, ஜீலான் மற்றும் ஜோஷி 2 விக்கெட் எடுத்தனர்.

இதனால் இந்திய அணி 138 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.