Indian Women Team Won
Indian Women Team Won

Indian Women Team Won – இங்கிலாந்துக்கு எதிரானஇரண்டாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டில் வென்ற இந்திய பெண்கள் அணி, ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஐ.சி.சி., சார்பில் பெண்கள் ஒருநாள் சாம்பியன்ஷிப் தொடர் 2017-2020 ஆம் ஆண்டுக்கான போட்டி பல்வேறு நாடுகளில் நடக்கிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் 2020 உலக கோப்பை தொடருக்கு நேரடியாக முன்னேறும்.

இதன் ஒரு பகுதியாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று இரண்டாவது போட்டி மும்பையில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு அமி 3 ரன் , சாரா டெய்லர் 1 ரன் , கேப்டன் நைட் 2 ரன் என ஆட்டம் இழந்தனர். பியுமண்ட் 20, வின்பீல்டு 28 சற்று உதவ, ஷிவர் 85 ரன்கள் எடுத்தார்.

மற்றவர்கள் கைவிட இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 161 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஜூலன் கோஸ்வாமி, ஷிகா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கைக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ்’டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

32 ரன் எடுக்க ஸ்மிருதி மந்தனாஅரைசதம் விளாசினார். இவர் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசியில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 41.1ஓவரில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

7 விக்கெட்டில் வெற்றி பெற்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. மிதாலி ராஜ் 47 ரன்னுடன் , தீப்தி 6 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 28ம் தேதி மும்பையில் நடக்கிறது.