indian Hockey Team :
indian Hockey Team :

indian Hockey Team : இந்திய பெண்கள் ஹாக்கி அணி, மலேசிய பயணத்தை வெற்றியுடன் துவக்கியது.

முதல் போட்டியில் இந்திய வீராங்கனை வந்தனா 2 கோலடித்து கைகொடுக்க 3-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

மலேசியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

கோலாலம்பூரில் முதல் போட்டி நடந்தது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் வந்தனா முதல் கோலடித்தார்.

இதற்கு மலேசிய வீராங்கனைகளால் பதிலடி தர முடியவில்லை. முதல் 30 நிமிட முடிவில், இந்திய அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 38வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி ஒரு கோலடித்தார்.

பின், 60வது நிமிடத்தில் இந்தியாவின் மந்தனா, தனது 2வது கோல் அடித்தார். சொந்த மண்ணில் கடைசி நிமிடம் வரை போராடிய மலேசிய வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி கோலாலம்பூரில் ஏப்ரல் 6ல் நடக்கவுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.