Indian cyclists win historic gold
Indian cyclists win historic gold

Indian cyclists win historic gold – உலக ஜூனியர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

ஜெர்மனியில் உலக ஜூனியர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதன் அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் எசோவ் ஆல்பென், ரோஜித் சிங், ரொனால்டோ சிங் அடங்கிய அணி களமிறங்கியது.

இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி முதலிடம் (44.625 நிமிடம்) பிடித்து தங்கம் கைப்பற்றி, புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலியா, பிரிட்டன் அணிகள் வெள்ளி, வெண்கலம் வென்றன.

உலக கோப்பையில் ஜெயிக்க போவது யார்? அப்படியே புட்டு புட்டு வைத்த ஜோதிடர் – வைரலாகும் வீடியோ.!

ஆண்கள் தனிநபர் ‘ஸ்பிரின்ட்’ பிரிவில் இந்தியாவின் எசோவ் ஆல்பென் 18, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளி கைப்பற்றினார்.

‘கெய்ரின்’ தனிநபர் பிரிவிலும் அசத்திய எசோவ் ஆல்பென், மூன்றாவது இடம் பெற்று வெண்கலம் வசப்படுத்தினார். மொத்தம் 3 பதக்கம் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 6வது இடம் பெற்றது.

உலக ஜூனியர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடாக இது அமைந்தது.