இரண்டு நாள் போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா, மே.தீ-களுடன் மோத உள்ளது. இத்தொடரின் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் தவான் உள்ளனர். அனுபவசாலி எம்.எஸ்.தோனி உள்ளார். மேலும் பந்துவீச்சில் பலம் சேர்க்க சஷால் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் உள்ளனர்.

இத்துடன் சமீபத்தில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் ஆல்ரவுண்டர் ஜடேஜா உள்ளார். மேலும் கே.எல். ராகுல் ராயுடு, முகமது சபி, மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷர்துல் தாகூர் அணியில் உள்ளனர்.

இதற்கு முன்பு நடந்த போட்டியில் எளிதாக வென்ற இந்திய அணியிடம் மேலும் நல்ல ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதற்கு தகுந்தாற் போல டிக்கெட் விலை குறைக்கப்பட்டு உள்ளது.