Indian cricket team two captains
Indian cricket team two captains

Indian cricket team two captains – தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்தியா ‘ஏ’ அணிக்கு மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் என, 2 கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியுடன் பங்கேற்கிறது.

இப்போட்டிகள் அனைத்தும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் (ஆக. 29, 31, செப். 2, 4, 8) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டது.

கடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் கடினம் – விஜய் சங்கர் ஓபன் டாக்!

முதல் மூன்று போட்டிகளுக்கு மணிஷ் பாண்டே தலைமையிலும், கடைசி 2 போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும் இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுப்மன் கில், விஜய் சங்கர், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புய், ஷர்துல் தாகூர், அக்சர் படேல், நிதிஷ் ராணா ஆகியோர் இரண்டு அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சகால், முதல் மூன்று போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மணிஷ் பாண்டே அணிக்கு விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் செயல்படுவார். ஸ்ரேயாஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் !

அணி விவரம்:

முதல் 3 போட்டி: மணிஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாத், சுப்மன் கில், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புய், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் துபே, குர்னால் பாண்ட்யா, அக்சர் படேல், யுவேந்திர சகால், ஷர்துல் தாகூர், தீபக் சகார், கலீல் அகமது, நிதிஷ் ராணா.

கடைசி 2 போட்டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சுப்மன் கில், பிரஷாந்த் சோப்ரா, அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, விஜய் சங்கர், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ராகுல் சகார், துஷார் தேஸ்பாண்டே, இஷான் பொரேல்.