Indian A Team : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

இந்தியா ‘ஏ’, விண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற 3வது டெஸ்ட் டிரினிடாட் நகரில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 201 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் ‘ஏ’ அணி ஒரு விக்கெட்டுக்கு 23 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த விண்டீஸ் ‘ஏ’ அணிக்கு கிருஷ்ணப்பா கவுதம் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ பிளாக்வுட் (22), கேப்டன் ஹாமில்டன் (9) சிக்கினர்.

இந்தியா ‘ஏ’ அணி அபார வெற்றி – மணிஷ் பாண்டே சதமடித்து அசத்தல் !

பொறுப்பாக ஆடிய ஜெரிமி சோலோஜனோ (69) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். ஆட்டத்தின் 73வது ஓவரை வீசிய கவுதம், ரேமன் ரெய்பர் (5), செமார் ஹோல்டர் (0), மிகுயல் கம்மின்ஸ் (0) தொடர்ச்சியாக அவுட்டாக்கி, ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் விண்டீஸ் ‘ஏ’ அணி 194 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் கவுதம் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘ஏ’ அணிக்கு பிரியங்க் பஞ்சால் (3), அபிமன்யு ஈஸ்வரன் (6), மயாங்க் அகர்வால் (5) ஏமாற்றினர்.

இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட்டுக்கு 23 ரன் எடுத்திருந்தது. நதீம் (5), சுப்மன் கில் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.