Indian 2 Villian

Indian 2 Villian : இந்தியன் 2 படத்தின் வில்லன் யாராக இருக்கும் என்பதை பற்றி ஷங்கர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இந்தியன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

அதற்காக கமல்ஹாசன் அவர்களுக்கு இந்தியன் தாத்தா வேடம் போட்டு பார்க்கப்பட்டுள்ளது.

தற்போதும் அந்த வேடம் கச்சிதமாக பொருந்தி உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க அஜித், சூர்யா, விஜய் சேதுபதி என இவர்களில் யாரை தேர்வு செய்ய உள்ளீர்கள் என கேட்டதற்கு விஜய் சேதுபதி சரியான நபராக இருப்பார் என கூறியுள்ளார்.

இதனால் இந்தியன் 2 படத்தின் வில்லனாக விஜய் நடிக்க சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நாளை முதல் 2 பாயிண்ட் ஓ படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.