Indian 2 Villain
Indian 2 Villain

Indian 2 Villain – அக்ஷய் குமார் கடைசி நேரத்தில் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி கொண்டதால் அவர்க்கு பதிலாக நடிக்க இருப்பது யார் என்பது தெரிய வந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் ஆகியோர் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முதல் தொடங்கி இருந்தது.

இந்த படத்தில் வில்லனாக 2 பாயிண்ட் ஓ படத்தில் நடித்திருந்த அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் படப்பிடிப்பு தேதிகள் அக்ஷய் குமாருக்கு ஒத்து வராததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார்.

மேலும் கமல்ஹாசன் வில்லனாக பாலிவுட் நடிகர் தான் நடிக்க வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார்.

இதனால் ஷங்கர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை ஒப்பந்தம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அபிஷேக் பச்சன் விரைவில் படபிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Abhishek Bachchan
Abhishek Bachchan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here