Indian 2 Update

Indian 2 Updates : இந்தியன் 2 படம் கை விடப்பட்டதாக வெளியான தகவல் உண்மையா? இல்லையா? என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2.

சித்தார்த்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகர்?

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தற்போது கை விடப்பட்டு விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கமல்ஹாசன் வேறு இது தான் என்னுடைய கடைசி படம் என அறிவித்து இருந்தாலும் படம் கை விடப்பட்டதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து விசாரிக்கையில் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில், இந்தியன் 2 படம் கை விடப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி.

படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில தினங்களில் சென்னையில் படமாக்கப்பட உள்ளன. அதன் பின்னர் கோகுலம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் படமாக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.