Indian 2 Update : 2 பாயிண்ட் ஓ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் வேளைகளில் பிஸியாக உள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 2 பாயிண்ட் ஓ படம் இன்று வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
2 பாயிண்ட் ஓ படத்தை தொடர்ந்து ஷங்கர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தின் பணிகளை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை பற்றிய அடுத்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாம்.
இந்த தகவல் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் 2 பாயிண்ட் ஓ படத்திற்கும் இந்தியன் 2 படத்திற்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி இல்லாமல் உடனடியாக அடுத்த பட வேலைகளை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.