Indian 2 Update
Indian 2 Update

Indian 2 Update – இந்தியன் 2 படத்தால் முதல் முறையாக ஷங்கருக்கு எதிர்பார்த்த சோதனை ஏற்பட்டுள்ளது, இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர். இவர் தொடர்ந்து அதிகமான பட்ஜெட்டில் தரமான பிரம்மாண்ட படங்களை கொடுத்து வருகிறார்.

இறுதியாக வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே எல்லாமே தாமதாக தான் நடந்து வருகிறது.

கமல்ஹாசனின் அரசியல் பயணத்தால் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தினால் இரண்டு வாரம் இடைவெளி விட வேண்டிய நிலையில் ஷங்கர் உள்ளார்.

மேலும் கமல்ஹாசனுக்கு மேக்கப் செட்டாகவில்லை என அது ஒரு தனி செலவு. படப்பிடிப்புகள் நடைபெறாமலே வீணாக செட்டிற்கு வாடகை என படத்தின் பட்ஜெட் எகிறி கொண்டே போகிறது.

இதனால் கடுப்பான தயாரிப்பு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் படத்தின் பட்ஜெட் சென்றால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என ஷங்கருடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. ஷங்கரும் வேறு வழியில்லாமல் ஒப்பு கொண்டுள்ளார்.

இது போன்ற சம்பவம் இதுவரை ஷங்கருக்கு நடந்ததே இல்லை.

இதுவே முதல் முறை அதுவும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தால் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.