Indian 2 to resume from June : Kamal Haasan |Shankar was planning to take the film in Hindi as an Indian 2 film. | kajal Aggarwal | Shankar | Anirudh

Indian 2 to resume from June :

இந்தியன் 2 படத்தை ஜூன் மாதம் துவங்க படக்குழு தயாராகி வருகிறார்களாம். படம் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டதாம்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

இந்தியன் 2 படத்துக்கு மிஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு – என்ன தெரியுமா?

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளனர்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தை ஜூன் மாதம் துவங்க படக்குழு தயாராகி வருகிறார்களாம். படம் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.