Indian 2 Set

Indian 2 Set : 2 நிமிட காட்சிக்கு ரூ 2 கோடி செலவு செய்துள்ளனர் இந்தியன் 2 படக்குழுவினர். இந்த தகவல் திரையுலகையும் ரசிகர்களையும் மிரள வைத்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

படங்களில் நடித்து கொண்டே மக்களுக்கு சேவை செய்வேன், அரசியல் செய்வேன் என கூறி வந்த கமல்ஹாசன் தற்போது தன்னுடைய முடிவை மாற்றி கொண்டுள்ளார்.

இனி முழு நேர அரசியல் தான்.. இந்தியன் 2 படமே எனது கடைசி படம் என அறிவித்து விட்டதால் இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு எக்கசக்கமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஒரு செட்டிற்காக ரூ 2 கோடி செலவு செய்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அந்த செட் படத்தில் வெறும் 2 நிமிட காட்சியில் தான் இடம் பெறுமாம்.

இதனால் இப்படம் 2.O படத்தை போலவே மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.