Indian 2 Poojai

Indian 2 Poojai  : இந்தியன் 2 படத்தின் செட் அமைக்கும் வேலைகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன. இதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வேளையில் இன்று இந்த படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த கூட்டணி நிச்சயம் ஒரு ஹாட்ரிக் கூட்டணியாக இருக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Indian 2 Set Pooja

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.