Indian 2 Problem : Lyca Production's Notice to Shankar | Kamal Haasan | Kajal Aggarwal | Diector Shankar | Kollywood Cinema News | Tamil Cinema News
இயக்குனர் ஷங்கருக்கு லைகா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போ இந்தியன் 2 படத்தின் நிலை தான் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Indian 2 Problem : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல், செட்டாகாத மேக்கப், பிக் பாஸ் ப்ரோமோ ஷூட் என கமல்ஹாசன் தொடர்ந்து இந்த படத்தை தள்ளி போட்டு கொண்டே வருகிறார்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

இதனால் கடுப்பான ஷங்கரும் இந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டு அடுத்த பட வேலைகளை கையில் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே இதுவரை கோடி கோடியாய் பணத்தை வாரி இறைத்துள்ள லைகா நிறுவனம் ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த நோட்டிஸில் மற்ற பட வேலைகளை உடனடியாக கை விட்டு விட்டு இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்குமாறு கேட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.