Indian 2
Indian 2

Indian 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது.

இவர மாதிரி வேற யாரும் எனக்கு அப்படி செஞ்சதில்ல – பிரியங்கா சோப்ரா சொல்வது யாரை தெரியுமா?

லைக்கா தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை.

மேக்கப் சரியில்லை, பைனான்ஸ் கிடைக்கவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கான வேலையை ஷங்கர் தொடங்கிவிட்டாராம்.

Megastar Chiranjeevi
Megastar Chiranjeevi

தமிழிலேயே ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆர்வம் காட்ட இந்தமுறை தெலுங்கு நடிகரை இயக்க ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம்.

தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னன் சிரஞ்சீவி தான் ஷங்கரின் அடுத்த ஹீரோ என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.