Indian 2 Movie Review
Indian 2 Movie Review

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், பாபி சிம்மா, சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜகன் உள்ளிட்டோருடன் இணைந்து யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களை யூடியூப் வீடியோக்களால் தட்டிக் கேட்டாலும் அதன்மூலம் எந்தவொரு பயனும் இல்லை என்றதும், இந்தியன் தாத்தா வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கும் அவர்கள் #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்கி வைரலாக்க தொடங்குகின்றனர்.

வெளிநாட்டில் உள்ள காளிதாஸ் ஜெயராம் இதனை பார்க்க, இந்தியன் தாத்தா இங்கே தான் இருக்கிறார் என்கிறார். அவரை இந்தியாவுக்கு போகவும் சொல்கிறார். இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தாவை நெடுமுடி வேணுவின் மகனான பாபி சிம்ஹா கைது செய்ய துடிக்க, அவரிடம் இருந்து தப்பித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக போட்டுத் தள்ள தொடங்குகிறார். இறுதியில் இந்தியன் தாத்தா கடைசியில் கைதானாரா? தப்பித்தாரா? என்பது தான் இந்தியன் 2 படத்தின் கதை.

YouTube video

படத்தைப் பற்றிய அரசியல் :

கமல் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. அதேபோல் படத்தில் நடித்துள்ள மற்றவர்களின் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். விவேகம் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

பாபி சிம்மாவின் கேரக்டர் படத்துக்கு ஏற்றார் போல இல்லை.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள நிலையில் திரைக்கதையில் இன்னும் கவனத்தை செலுத்தி இருக்கலாம் என யோசிக்க வைக்கிறது.

இந்தியன் படத்தில் ஆங்காங்கே வந்த வர்மக் கலையை இந்த படத்தில் முழுமையாக வைத்து அதை மட்டுமே நம்பி கதையை கொண்டு சென்றுள்ளார்.

இந்தியன் பாதி அந்நியன் பாதி என சங்கர் தனது அனைத்து படங்களிலிருந்தும் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் இந்தியன் 2 ஒருமுறை பார்க்கலாம்.