
Indian 2 Movie : இந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை கமிட் செய்தது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் இந்தியன் 2. 1996-ல் வெளியாகி இருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாக உள்ளது.
முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் ஷங்கர். ஆனால் நயன்தாராவின் கண்டிஷன்களும் 6 லட்ஷம் சம்பளமும் கேட்டது படக்குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தயாரிப்பு நிறுவனம் நயன்தாரா வேண்டாம் என கூறி விடவே காஜல் அகர்வாலை கமிட் செய்துள்ளனர்.
இந்தியன் 2 படத்தில் தான் நடிப்பதை காஜல் அகர்வாலும் நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது அதற்கான பணிகளில் ஷங்கர் மும்மரமாக இறங்கி வேலை செய்து வருகிறார்.