Indian 2 movie

Indian 2 : இந்தியன் 2 படத்தில் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 வெளியாகி இருந்த படம் இந்தியன்.

இந்த படம் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக அளவில் மிக பெரிய சாதனைகளை படைத்து வெற்றி பெற்றது.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளன.

இப்படத்தில் கமல்ஹாசன், அஜய் தேவ்கண் ஆகியோர் நடிக்க உள்ளனர். நயன்தாரா நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இன்னும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்னவென்றால் இந்தியன் 2 படத்தில் சிம்பு, துல்கர் சல்மான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இரண்டாவது நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

கமல்ஹாசன், சிம்பு, அஜய் தேவ்கன், துல்கர் சல்மான். காஜல் நயன்தாரா, காஜல் அகர்வால் என மிக பெரிய பட்டாளமே இணைந்து நடிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.