இந்தியன் 2 திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, அந்த ஷூட்ட்டிங் நேற்றுடன் நிறைவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 10 நாட்களுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சேனாதிபதி கதாபாத்திரத்திற்காக நடிகர் கமல்ஹாசன் தினமும் மேக்கப் காக மட்டும் ஆறு மணி நேரம் செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறது.