இந்தியன் 2 திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் உலக நாயகனாக வளம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் திசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஸ்பெஷலான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா நடித்திருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது புதிய அப்டேட்டாக தற்போது சூரத்தில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.